Language: සිංහල English

WhatsApp-ல் Copilot சேவை நிறுத்தம்

Tech News ஒரு மாதத்திற்கு முன்பு 11815 Views

2026 ஜனவரி 15க்கு பிறகு WhatsApp-ல் Copilot AI chatbot பயன்படுத்த முடியாது என்று Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் Microsoft எடுத்த முடிவு அல்ல; WhatsApp மற்றும் Meta நிறுவனங்கள் மேற்கொண்ட policy update காரணமாக ஏற்பட்டது. இந்த update-க்கு பிறகு, ChatGPT, Perplexity, Copilot போன்ற third-party AI chatbots WhatsApp-ல் இயங்குவதற்கு Meta கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக, WhatsApp மூலம் Copilot பயன்படுத்திய பயனர்களுக்கு அந்த சேவை 2026 ஜனவரி 15 முதல் நிறுத்தப்படும். Microsoft கூறுவதப்படி, WhatsApp chat history Microsoft apps அல்லது web-க்கு தானாக மாற்றப்படாது. எனவே, பழைய Copilot chats-ஐ சேமிக்க விரும்பினால், January 15க்கு முன் “Export chat” function பயன்படுத்தி backup எடுக்கலாம்.

ஆனால் WhatsApp-ல் இந்த சேவை நிறுத்தப்படுவது Copilot பயன்பாடு முழுமையாக முடிவடைகிறது என்பதல்ல. எதிர்காலத்திலும் Copilot-ஐ Copilot mobile app, Copilot website, மற்றும் Windows 10, Windows 11-ல் built-in ஆக கிடைக்கும் Copilot மூலம் இலவசமாக தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

whatsapp ai microsoft meta

Comments (3)

Please login to comment

Loading comments...