Meta Phoenix MR வெளியீடு தாமதம்
Meta நிறுவனம் தனது புதிய Mixed Reality (MR) device ஆன Phoenix-ன் வெளியீட்டை 2027 வரை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. இது முதலில் 2026 இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தாலும், முழுமையாகவும் சரியாகவும் செயல்படும் ஒரு சாதனத்தை சந்தைக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டதாக Meta தெரிவிக்கிறது. “Puffin” என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த Phoenix MR device சுமார் 100g எடை கொண்டதாகும். இதன் display resolution, Apple Vision Pro போன்ற high-end Mixed Reality devices-ஐ விட குறைவாக இருந்தாலும், Augmented Reality (AR) மற்றும் Virtual Reality (VR) இணைந்த ஒரு hybrid experience-ஐ வழங்குகிறது. அதாவது, real world மற்றும் digital world ஒன்றாக கலந்த அனுபவத்தை வழங்குகிறது.

உதாரணமாக, உங்கள் உண்மையான அறைக்குள் 3D digital objects மிதந்து காணப்படும் அனுபவம் கிடைக்கும். மேலும், ஒரே நேரத்தில் 3 முதல் 5 வரை virtual screens-ஐ பார்க்கும் வசதியும் இருக்கும். laptop ஒன்றும் இல்லாமல், சுமார் 100 அங்குல அளவிலான பெரிய floating screens-ஐ உருவாக்கும் திறனையும் இந்த device வழங்கும்.
Comments (8)
Please login to comment