Switch language සිංහල English தமிழ்
Dark mode
🌙

Meta மனநல தகவல் மறைத்ததாக நீதிமன்றம்

Tech News 7 மாதங்களுக்கு முன்பு 10472 Views
அமெரிக்க பள்ளி மாவட்டங்கள் தாக்கல் செய்த திருத்தப்படாத (unredacted) ஆவணங்களின் அடிப்படையில், Facebook மற்றும் Instagram பயன்பாடுகள் பயனர்களின் மனநலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதற்கான உள்துறை ஆதாரங்களை Meta மறைத்ததாக புதிய அமெரிக்க நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. Meta, Google, TikTok மற்றும் Snapchat ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக நவம்பர் 22 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் போது இந்த தகவல் வெளியானது.
2020 ஆம் ஆண்டில், Meta நிறுவனத்தின் internal researchers “Project Mercury” என்ற பெயரில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இதில் Nielsen survey firm-மும் பங்கேற்றது.
இந்த ஆய்வில், தினமும் 7 நிமிடங்கள் Facebook மற்றும் Instagram-ஐ deactivate செய்த பயனர்களின் மனநிலை மாற்றங்கள் ஒப்பிடப்பட்டன.
ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு:
  • Depression குறைந்தது
  • Anxiety குறைந்தது
  • Loneliness குறைந்தது
  • Social comparison தொடர்பான பிரச்சினைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தன
அதாவது, Facebook மற்றும் Instagram பயன்படுத்தாதபோது மனநலம் மேம்பட்டது. ஆனால் இந்த முடிவுகளை Meta பொதுமக்களுக்கு வெளியிடவில்லை. இந்த ஆய்வு நிறுவனத்திற்கு எதிர்மறையாக இருப்பதை உணர்ந்த Meta, ஆய்வை நிறுத்தி, கிடைத்த தகவல்களை வெளியுலகிற்கு வழங்காமல் மறைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், “எங்கள் apps பாதிப்பை ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதை துல்லியமாக அளவிட முடியாது” என்று Meta, US Congress-க்கு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் அடுத்த நீதிமன்ற விசாரணையில் விவாதிக்கப்பட உள்ளது. அந்த விசாரணை ஜனவரி 26 அன்று Northern California Court-ல் நடைபெற உள்ளது.

facebook meta social media

Comments (3)

Loading comments...