Alibaba Quick AI Glasses அறிமுகம்
Alibaba நிறுவனம் இன்று (நவம்பர் 27) “Quick AI Glasses” என்ற புதிய AI-powered smart eyewear-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே Meta, Apple, Samsung, Xiaomi போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற தயாரிப்புகளை சந்தையில் கொண்டு வந்துள்ள நிலையில், Quick AI Glasses அறிமுகம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 80,000–82,000 ஆகும். இந்த device black plastic frame உடன் வருவதுடன், மிகவும் லேசான எடையைக் கொண்டதாகும். இதில் Alibaba-வின் Qwen AI model முக்கிய intelligence ஆக பயன்படுத்தப்படுகிறது. Glass மற்றும் mobile app இரண்டும் Qwen AI-யுடன் முழுமையாக integrated செய்யப்பட்டுள்ளன. சாதாரண கண்ணாடி போல தோன்றினாலும், இதில் AI chipset மற்றும் mini display system ஒன்று உள்ளது.

இந்த AI glasses பயன்படுத்தும்போது, நீங்கள் ஒரு signboard அல்லது menu-வை பார்க்கும் நிலையில், அதனை real-time-ல் translate செய்யும் வசதி கிடைக்கும். உதாரணமாக, Chinese signboard ஒன்றை English அல்லது பிற மொழிகளாக மாற்றிக் காண முடியும். இதற்குடன் map navigation வசதியும் உள்ளது. Photos மற்றும் video recordings எடுக்கும் திறனுடன், AI மூலம் விரைவான பதில்கள், price recognition போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதனால் shopping செய்யும் போது விலைகளை விரைவாக சரிபார்க்க முடியும். இவற்றுக்கு மேலாக, பல்வேறு தினசரி பணிகளில் உதவும் பல அம்சங்களையும் இந்த AI glasses வழங்குகின்றன.
Comments (0)
Please login to comment