Language: සිංහල English

Airbus A320 பெரும் Recall உத்தரவு

Aviation ஒரு மாதத்திற்கு முன்பு 10739 Views

Airbus நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள A320 குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 6,000 விமானங்களை உடனடியாக தரையிறக்கி, அவசர பராமரிப்பு (repair) செய்ய உத்தரவிட்டுள்ளது. இது Airbus-ன் 55 ஆண்டுகால வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய recall ஆக கருதப்படுகிறது. இந்த விமானங்களை மீண்டும் சேவைக்கு கொண்டு வருவதற்கு முன், flight control software-ஐ முந்தைய version-க்கு rollback செய்ய airlines-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயண சீசனின் மிகவும் பிஸியான ஒரு weekend-இல் இந்த அறிவிப்பு வெளியானதால், airlines-க்கு இது மேலும் கடினமான நிலையை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே engine repair backlog, staff shortage மற்றும் maintenance delays ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள airlines-க்கு இது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் flight delays, cancellations மற்றும் schedule changes ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 30 அன்று Cancun-இலிருந்து Newark-க்கு சென்ற JetBlue A320 விமானம் திடீரென altitude இழப்பை சந்தித்து, Tampa-வில் அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சில பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்து, software மற்றும் radiation இடையிலான தொடர்பை Airbus engineers உறுதி செய்யும் முக்கிய தடயமாக அமைந்தது.

Airbus மேற்கொண்ட ஆய்வுகளின்படி, இது ஒரு சாதாரண software bug அல்ல. அதிக அளவிலான சூரிய கதிர்வீச்சு (solar radiation) நிலைகளில், aircraft flight-control computers-ல் உள்ள முக்கியமான data corrupt ஆகும் நிலை கண்டறியப்பட்டுள்ளது. இந்த data corruption, flight-control logic-ஐ நேரடியாக பாதித்து, திடீர் மற்றும் ஆபத்தான altitude மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்குகிறது.

A320 series விமானங்கள் fly-by-wire system-ஐ மிக அதிகமாக சார்ந்தவை. எனவே onboard flight data corrupt ஆகுவது flight safety-க்கு மிகப்பெரிய ஆபத்தாகும். Fly-by-wire என்பது பாரம்பரிய mechanical cable முறைக்கு பதிலாக electronic data மூலம் விமான கட்டுப்பாடு செய்யப்படும் அமைப்பாகும். இது விமானிகள் குறைந்த உடல் முயற்சியுடன் controls இயக்க உதவுவதுடன், pilot inputs அனைத்தையும் சரிபார்த்து, மனிதப் பிழைகளை குறைத்து விபத்துகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Airbus தற்போது radiation-resistant data-handling patch ஒன்றை வெளியிடுவதாக உறுதி செய்துள்ளது. Aircraft-களை மீண்டும் சேவைக்கு கொண்டு வர airlines-க்கு software rollback, testing மற்றும் inspection ஆகியவை முடிக்க வேண்டியிருக்கும். அதுவரை, A320 குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான விமானங்கள் maintenance centers-க்கு செல்லும் ferry flights only mode-ல் மட்டுமே இயக்கப்படும்.

Airbus aircraft aviation

Comments (1)

Please login to comment

Loading comments...