Warner Bros வாங்க Netflix பேச்சுவார்த்தை
HBO, CNN, HBO Max போன்ற பிரபல brand-களை கொண்ட Warner Bros Discovery நிறுவனத்தை வாங்குவதற்காக Netflix முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, HBO Max + Netflix என்ற bundled package ஒன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம், பயனர்கள் தற்போது செலுத்தும் தொகையை விட குறைந்த செலவில் இரு services-யையும் பெறும் வாய்ப்பு உருவாகும். தரவுகளின் படி, HBO Max பயன்படுத்தும் பலரும் Netflix-யையும் பயன்படுத்துவதால், இந்த bundle மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த deal வெற்றிகரமாக முடிந்தால், ஒரே subscription மூலம் Netflix மற்றும் HBO Max ஆகியவற்றை பயனர்கள் பெற முடியும். இதன் மூலம் Movies, TV series, Documentaries, Animation மற்றும் DC Universe உள்ளடக்கங்களை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். இதனால் இது உலகிலேயே மிகப்பெரிய content library-களில் ஒன்றாக மாறும். Netflix நிறுவனத்தின் கூற்றுப்படி, இது போட்டியை குறைப்பதற்கான முயற்சி அல்ல; மாறாக, பயனர்களின் மாதாந்திர செலவுகளை குறைத்து அதிகமான entertainment அனுபவத்தை வழங்கும் customer-friendly proposal ஆகும்.
Comments (3)
Please login to comment