Language: සිංහල English

Apple Ads, Maps மீது EU விசாரணை

Tech News ஒரு மாதத்திற்கு முன்பு 9828 Views

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) antitrust ஒழுங்குமுறை அமைப்பான European Commission, Digital Markets Act (DMA) சட்டத்தின் கீழ் Apple Ads மற்றும் Apple Maps சேவைகளை “Gatekeeper” சேவைகளாக வகைப்படுத்த வேண்டுமா என்பதை ஆராய தொடங்கியுள்ளது. Big Tech நிறுவனங்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி, பயனர்களுக்கு அதிக போட்டி உள்ள சந்தையை உருவாக்குவதே EU-வின் நோக்கமாகும்.


DMA சட்டத்தின் கீழ் Gatekeeper சேவைகளாக வகைப்படுத்தப்படுவது:

. மாதாந்திர செயல்பாட்டுப் பயனர்கள் 45 மில்லியனை கடந்த சேவைகள்
. சந்தை மதிப்பு US $79 billion-ஐ கடந்த நிறுவனங்கள்


Gatekeeper என வகைப்படுத்தப்படும் சேவைகள் சிறப்பு விதிமுறைகள் மற்றும் செயல்முறை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். Apple App Store, iOS மற்றும் Safari Browser ஆகியவை ஏற்கனவே DMA விதிகளின் கீழ் வருகின்றன. Apple நிறுவனத்தின் கருத்துப்படி, Apple Ads ஐரோப்பிய digital advertising சந்தையில் முக்கியமான போட்டியாளராக இல்லை. Google, Meta, Microsoft, TikTok, X போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது Apple-ன் ad share குறைவாக உள்ளது. அதேபோல், Apple Maps பயன்பாடும் Google Maps, Waze போன்ற mapping சேவைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் வரையறுக்கப்பட்டதாக உள்ளது.


Apple Ads மற்றும் Apple Maps சேவைகள் EU Gatekeeper label பெறுமானால், Apple நிறுவனத்திற்கு கடுமையான data கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி வரும். மேலும், Apple Maps-ஐ third-party apps-க்கு கட்டாயமாக access வழங்க வேண்டும் மற்றும் developer-friendly, fair rules-ஐ பின்பற்ற வேண்டும். இந்த விதிகளை மீறினால், பெரும் அளவிலான அபராதங்கள் விதிக்கப்படலாம்.

eu apple apps

Comments (8)

Please login to comment

Loading comments...